சனிக்கிழமை யாராவது பிரணாய் ரய் அவர்களின் செய்தி தொலைகாட்சியான NDTV பார்த்தீர்களா??
இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மும்பை மருத்துவ மாணவர்கள் மீது தடியடி நடத்தப் பட்ட காட்சிகளை ஒளிபரப்பினார்கள.
பார்க்கிறது செய்திகள் தானா இல்லை ரங் தே பசந்தி படத்தின் காட்சி்சி தானா என்பது போல் இருந்தது. போலீஸாரையும் மொத்தமாக குற்றம் சொல்லிவிட முடியாது. உண்ணாவிரத போரட்டமாக இருந்தவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்து. மாணவர்கள் அணியாக புறப்பட்டு ராஜ்பவனை நோக்கி சென்ற போது தான் போலீஸார் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.
ஆனால் மசியாத மாணவர்கள் மீது அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் தான் சர்ச்சைக்கு உரியது. மாணவர்கள் தங்கள் கோரிக்கை வைப்பதற்காக ஆளுனரை சந்திக்க செல்லும் போது கலவரம் எவ்வாறு ஏற்படப் போகிறது. தலித் தலைவர்கள் போராட்டம் நடத்தும்போது பிரச்சினை வந்தால் பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறை மாணவர்களுடனும் அதை செய்து இருக்கலாம்.அதை விட்டு “உன் மேல் சாராயத்தை தெளித்து நீ குடித்ததாக வழக்கு போடுவேன்” என சொல்வது நன்றாகவா இருக்கிறது. பெண்மை பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் அந்த பெண் மருத்துவர்கள் சாலையில் இழுத்து செல்லப்பட்ட காடசி்சி்்சிகளை பார்த்திருக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் போலிஸாரின் தடியடி சம்பவத்தால் உயிரிழந்தவர்களை வைத்தே இன்னும் தென் மாவட்டங்களில் ஒருவர் அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நான் இந்த பதிவ எழுதியவுடன் வரும் பின்னூட்டம் “3000 வருஷம் நாங்க வாங்கினோம் இப்பொ நீங்க வாங்குங்க” என்பதாகத் தான் இருக்கும். தங்கள் கருத்தை வலியுறுத்த ஆளுனரை சந்திக்க சென்றவர்களுக்கு இந்த கதியா?
“அத்துமீறி நுழையும்போது தான் அவர்களை தடுக்க வேண்டி வந்தது. நாங்கள் தடியடி நடத்தவில்லை” என ஒரு காவல்துறை அதிகாரி சொல்லி இருந்தார். ஆனால் அவர்கள் தடியடி நடத்தியது கோப்பு காட்சிகளில் இருக்கிறது.
இதன் விளைவாக ஞாயிற்று கிழமை 2000 மருத்துவர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தானே தவிர வேறு யாரும் இல்லை. சென்ஸிடிவ் ஆன இந்த பிரச்சினைக்கு என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்.
இப்போதைக்கு இது பற்றி அறிக்கை தரச் சொல்லி காவல்துறையை மகாராஷ்டிர அரசு கேட்டுள்ளது. என்று தணியும் இந்த அடக்குமுறை.

Advertisements