பாலா!! காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற படங்களை பார்த்த பிறகு, இந்த 12ம் வகுப்பு படிக்குற பையனுக்கு காதலிக்க ஆசை வர்றது தப்பு இல்லனு நினைக்குறேன்.

அவனுக்கு தெரியும் அவங்க அப்பா அம்மா ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. அதனால அவன் அவங்க ஜாதியிலயே பொண்ணு தேட(!) ஆரம்பிச்சான்.

இந்த உயர்ந்த நோக்கத்துகாக அவனுக்கு பிடிக்காத பல விஷயங்கள அவன் செய்ய வேண்டி இருந்தது. முக்கியமானது அவன் சொந்தக்காரங்க கல்யாணத்துல கலந்துக்க வேண்டியிருந்தது. இப்படி கஷ்டமான பல கல்யாணங்களுக்கு பின் அவன் ஒரு பொண்ண பார்த்தான். அவதான் திவ்யா.

பொண்ணு பார்த்தாச்சு; எப்படி அப்ரோச் பண்றது. இதுக்குதான் ஒரு தங்கை வேணும். தங்கைகிட்ட ஒரு வாழ்த்து அட்டைல “உன்னிடம் பேச வேண்டும். சந்திக்கலாமா??”

தங்கையும் அவள பார்த்து திரும்பி வரும்போது “உன்ன அவ ஈவினிங் 6 மணிக்கு மீட் பண்ணுவாளாம். அவ கெமிஸ்ட்ரி ட்யூஷன் முன்னாடி உன்ன மீட் பண்றேன்னு சொன்னா. என்னயும் வர சொல்லி இருக்கா”

நல்லா டிரஸ் பண்ணி 6 மணிக்கு போனா; அவ கால்ல கஞ்சி கொட்டுன மாதிரி நின்னுகிட்டு “ஏதோ சொல்லணும்னு சொன்னியே, சீக்கிரம் சொல்லு” அப்படின்னா.

“நான் உன்ன விரும்புறேன்னு நினைக்குறேன். நீ அதப் பத்தி என்ன சொல்ற?”

“விளயாடுறியா! நீ எனக்கு பிரபோஸ் பண்ண 14த் ஆள்.இந்த மாசத்துல. நீ ஆசப்பட்டா நாம ஃப்ரண்ட்ஸா இருப்போம்”

“எனக்கு உயிர குடுக்குற அளவுக்கு நண்பர்கள் இருக்காங்க. எனக்கு தேவ ஒரு பார்ட்னர். நீ விரும்பலேன்ன தட்ஸ் ஓகே.”

அவன் வீட்டுக்கு வந்து பயங்கரமா அழுதான். அவன் தங்கைக்கு அவன பார்க்க பாவமா இருந்தது. 2 மாசம் கழிச்சு ஒரு சண்டே ஈவினிங், காலிங் பெல் சத்தம் கேட்டுச்சு பாலா வீட்ல.

பாலா தான் கதவ திறந்தான், திவ்யா வாசல்ல நின்னுகிட்டிருந்தா. அவன் தங்கைய கூப்டு சொல்லிட்டு, வெளில கிளம்பிட்டான்.

சாதாரண நல விசாரிப்புகளுக்கு அப்புறம் திவ்யா
“சும்மா இந்த பக்கமா வந்தேன் அதான் உங்கள பார்த்துட்டு போகலாம்னு.. உங்க அண்ணன் எங்க போனார்??”

“இன்னைக்கு சண்டே இல்ல! அதான் ஃபுட்பால் விளையாட போயிருக்கான். அவன் நல்ல விளையாடுவான்.”

“நல்ல வேளை! உங்க அண்ணனும் கிரிக்கெட் பின்னாடி போய்டுவானோன்னு நினைச்சேன்.இது என்னோட மொபைல் நம்பர் அண்ணன் வந்ததும் கால் பண்ண சொல்லு. வேற ஒண்ணுமில்ல, அன்னிக்கு நான் பேசினதுக்கு சாரி கேக்கணும்”

வீட்டுக்கு வந்ததும் தங்கைகிட்ட எல்லா விஷயத்தையும் கேட்டான்.

“என்னது, ஃபுட் பாலா, ரூல்ஸ் கூட எனக்கு தெரியாதேடி!”

“அது எனக்கு தெரியும், உனக்கு தெரியும், அவளுக்கு தெரியுமா?? அவ என்ன கேக்கணும்னு ஆச பட்டாளோ அதத் தான் நான் சொன்னேன். நீ முத்ல்ல கால் பண்ணு.”

பாலா அவசர அவசரமா கால் பண்ணான்.

“ஹலோ திவ்யா! நீ எதோ பேசணும்னு சொன்னியாமே”

அதுக்கு அப்புறம் அவங்க ஃபோன் பில் 200 மடங்கு ஆனத பத்தி நான் சொல்லணுமா என்ன.
————————-
பதிவுக்கு தலைப்பு வைக்கல!! உங்களுக்கு பிடிச்ச தலைப்ப நீங்க பின்னூட்டதுல சொல்லலாம்.

Advertisements