என் நண்பன் பாலாவுக்கும் அவன் தங்கச்சிக்கும் ஆகவே ஆகாது. சண்டைனா அப்படி பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிச்சுக்குவாங்க. அன்னைக்கு அவங்க வீட்ல உக்காந்து டி.வி. பார்த்துகிட்ருந்தேன். அப்பொ சர்ஃப் எக்ஸ்ல் விளம்பரம் போட்டான். அந்த பொண்ணு சகதில விழுந்தவுடன் அண்ணனுக்கு வரும் பாருங்க கோபம்.
பார்த்துக்கிட்டு இருக்கும்போதெ பாலா கிட்ட கேட்டேன்.

“டேய்! இத மாதிரி சாரி கேளுனு சகதிய அடிப்பியா??”

” என் தங்கச்சிய வெணும்னா அடிப்பேன்”

இந்த மாதிரி தங்கச்சி இருக்குற பசங்க எல்லாமே இப்படித்தான் இருக்குறாங்க. சில விஷயங்கள்ல நான் ரொம்ப லக்கி. அன்பான அப்பா அம்மா அண்ணன் இருந்தாலும், அக்காவோ தங்கச்சியோ இல்லயேன்னு ஒரே வருத்தம் தான்.
எங்க அப்பாவுக்கு 3 அக்காமார். இப்பவும் அவங்க தம்பிய தாங்குற தாங்கு இருக்கே! அத பார்த்து தான் எனக்கு பொறாமையா இருக்கும். எல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி வரைதான். இப்பொ அந்த குறையும் எனக்கு இல்ல.

சிந்துஜா!! இப்பொ நான் ரொம்ப பெருமையா சொல்லுவேன். என் தங்கை . எல்லாருக்கும் இணையம் நண்பர்களை குடுக்கும்; எனக்கு தங்கைய குடுத்திருக்கு. அருமையான பொண்ணு என் மேல ரொம்ப பாசம் வெச்சிருக்குற பொண்ணு. ஒரு தங்கச்சி இருந்து என்னல்லாம் செய்யணும்னு நினைச்சேனோ அத எல்லாம் நான் கேக்காமலே எனக்கு செஞ்சவங்க. தினமும் எனக்கு கால் வரும், கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருப்போம். அன்னிக்கு எங்க அப்பாகிட்ட இத பத்தி பேசிக்கிட்டு இருந்தப்போ அவர் சொன்னது தான் நான் இப்போ சொல்லப் போறேன்.
” பிரசன்னா, உனக்கு இப்பொ இன்டர்னெட் அது இதுன்னு நீ பேசுற ஆனா இதெல்லம் இல்லாத காலத்திலயே எனக்கு ஒரு தங்கச்சி கிடைச்சா. என் நண்பன் ஒருத்தனுக்கு கல்யாணம், நான் போன போது அவங்க அம்மா மாடில இருந்து விழுந்துட்டாங்கன்னு ஒரே பரபரப்பு. எல்லாரும் அந்த பொண்ணு காதுபடவே அவ ராசி இல்லாதவன்னு பேசுறாங்க, எனக்கு கஷ்டமா போச்சு,
நான் உடனே நல்ல வேளை போண்ணு வந்த வேள தலைக்கு வந்தது தலப்பாகயோட போச்சு அப்டின்னு பேச்ச மாத்திட்டேன். அதுல இருந்து அந்த போண்ணு என் மேல ரொம்ப பாசமா இருப்பா!!! என் கல்யாணத்துக்கு கூட அவதான் பொண்ணு அலங்காரம் எல்லாம் பண்ணி குடுத்தா. இப்பொ எப்டி இருக்காங்கன்னு தெரியல! நீயாவது கடைசி வரைக்கும் டச்ல இரு”ன்னு சொன்னாங்க.

சே நமக்குதான் முதல்ல இது நடந்திருக்குனு சொல்லப் போனா, அவருக்கு நம்மள விட ஒரு கதை இருக்கானு நினைச்சேன். ஆனா அந்த அம்மா எங்க போனாங்கனு ஒரு விபரமும் எங்ககிட்ட இல்ல. அப்படி ஒரு நிலைமை, எனக்கும் சிந்துஜாவுக்கும் வரவேண்டாம்.
நாங்க நல்ல அண்ணன் தங்கையா இருந்திட்டு போறோம்.

Advertisements