ஒரு கம்பெனி முதலாளி அவரோட ஃபாக்டரிய சுத்தி பர்க்க வந்தாராம். அப்பொ அங்க ஒரு பையன் வேலை எதுவும் பார்காம சும்மா நின்னுகிட்ருந்தான். அவர் அவன் கிட்ட போய் நின்னு
“உனக்கு இங்க எவ்ளோபா சம்பளம்”னு கேட்டார்.
அவன் குழப்பமா “2000 ரூபாய்”ன்னான்.
உடனே அவர் பர்ஸ திறந்து கொஞ்ச ரூபா எடுத்து “இதுல 6000 இருக்கு. இனிமே இந்த பக்கமே வராத”னுட்டார்.
அவனும் உடனே வாங்கிட்டு போய்ட்டான்.
அப்புறம் அவர் தன்னோட மானேஜர் கிட்ட “இப்பொ நான் துரத்தினேனே அந்த பய இங்க என்ன வேலை பார்த்தான்??” அப்படின்னு கேட்டார்.
அதுக்கு மானேஜர் “சார்! அவன் கூரியர் பையன் அப்படின்னு சொன்னாராம்

Advertisements