ஒரு சின்ன சிந்தனை. உங்களுக்கு ஒரு விபத்தில் கையோ காலோ பொயிருச்சுன்னு வைங்க, ஒரு பேச்சுக்கு தாங்க, உங்க மனைவி உங்களை விட்டு போனா நீங்க எப்படி ஃபீல் பண்ணுவீங்க?
இந்த தடவை “அவள் விகடன்” படிக்கும் பொழுது ஒரு படத்தோட விமர்சனம் படிச்சேன். படிக்கும் போதே ரொம்ப பாதிப்பு குடுத்த ஒரு கதை. அது ஒரு நெதர்லாந்து நாட்டு படம். படதோட பெயர் ஹெத் ஜுயிதே. வாசிக்க கஷ்டமாதான் இருக்கு ஆனா நல்ல ஒரு மேட்டர்.
கதைப்படி மார்ஜே அப்படிங்குற பொண்ணு நல்ல உழைப்பாளி. ஆனா அவகிட்டயும் சில குறைகள். ஆவங்களோடது லாண்ட்ரி ஷாப். அங்க புதுசா ஒரு பையன் வேலைக்கு வர்றான். அவன் இந்த மார்ஜே அப்படிங்குர பொண்ண அப்படி இப்படி பண்ணி கரெக்ட் பண்றான். ஒரு நாள் விஷயம் கை மீறிய நேரம் அவங்க ரெண்டு பேரும் தனி ரூமுக்கு போறாங்க.
அப்போ தான் அந்த பொண்ணு அவன்கிட்ட ஒரு முக்கியமான மேட்டர போட்டு உடைக்குறா. அதாவது அந்த போண்ணுக்கு மார்பக புற்று நோய். அதனால ரெண்டு மார்பகங்களயும் ஆபரேட் பண்ணி எடுத்துட்டாங்க. இந்த மேட்டர் தெரிஞ்சதுமே அந்த பய “ஐ யம் சாரி” அப்படினு சொல்லி எஸ்கேப். ஆனா அந்த பொண்ணுக்கு ஏமாற்றம் தாங்கல. அவன் பின்னடியே அழுதுகிட்டு ஓடுறா. பார்குறவங்க அந்த பையன் அவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணான்னு நினைச்சு, அந்த பையன லாண்ட்ரில இருக்குற பாய்லர் ரூம்ல போட்டு அடைசிடுறாங்க
ஏற்கனவே பல நிராகரிக்கபட்டதால டிப்ரஷன்ல இருந்த அந்த பொண்ணு இப்பொ மன நோயாளியாவே ஆகிடிச்சு. அந்த பையன அந்த பாய்லர் ரூம்லயெ அடைச்சு வெச்சு கொன்னுடுது.
இதுல அந்த மார்ஜேவா நடிச்சிருக்குற மோனிக் ஹெண்டர்ஸ் ரொம்ப அருமையா நடிச்சிருகாங்க.
அதாவது ஆம்பளைக்கு எவ்வளவு குறை இருந்தாலும் பொண்ணுங்க பொறுதுக்கணும், ஆனா பொண்ணு உடம்புல ஒரு தேமல் இருந்தா கூடஅத ஆம்பளையால ஒத்துக்க முடியல. ஏன் இவ்வளவு வேற்றுமை. உலகத்துல இது போல எத்தனையோ பொண்ணுங்கள ஆம்பளைங்க மன நோயாளி ஆக்கி இருக்காங்க.
அதுவும் போக எப்பொ தான் தமிழ்ல இது போல விவாததுக்கு எடுத்துகொள்ளும் படியான படங்கள் வர போகுதுன்னு தெரியல. இன்னும் எத்தனை காலத்துக்குதான் ஹீரோவோட சவாலயும், ஹீரோயினோட தொப்புளயும் பார்க்க வேன்டி இருக்கோ???
படம்: ஹெத் ஜுயிதே
நாடு: நெதர்லாந்து
இயக்கம்: மார்ட்டின் கூல்ஹோவன்

Advertisements